மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி
திண்டுக்கல் AS மஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டியில் திண்டுக்கலைச் சேர்ந்த விவேக் மிஸ்டர் திண்டுக்கல் பட்டம் வென்றார்;
திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் சார்பில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அளவிலான அமேச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. மிஸ்டர் ஆர் எம் எஸ் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றன. திண்டுக்கல், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து 15க்கு மேற்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் இருந்து 150 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசாக ப்ரோ ஜோன் பிட்னெஸை சேர்ந்த விவேக் தனது உடற்கட்டு திறன்களை காட்டி முதல் பரிசாக ரூபாய் 50,000, தங்க கேடயம், ஆணழகன் பட்டம் பெற்றார் . . இரண்டாம் இடம் பிடித்த பிரபுவிற்கு ரூபாய் 30,000 வெள்ளிக் வெள்ளிக் கேடயமும், மூன்றாவது பரிசாக யாசர் அராபத்துக்கு ரூபாய் 10,000 மற்றும் வெண்கல கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மிஸ்டர் திண்டுக்கல் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் ஆகிய பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆணழகன் போட்டிகளை பார்வையிட வந்த சிறுவன் இம்மானுவேல், சிறப்பு நிகழ்ச்சியாக தனது திறனை காட்டும் வகையில் உடற்கட்டுகளையும் காட்டி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.