காவலர் பிடியிலிருந்து தப்பி ஓடியவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
காவலர் பிடியிலிருந்து தப்பி ஓடியவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்பனையாளரை கைது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது காவலர் பிடியிலிருந்து தப்பி ஓடியவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார் அதன் பேரில் தனிப்படை காவலர்கள் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் சோதனை செய்ததில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த கங்காதரன் என்பவரை கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர் சீனிவாசன் ஆகியோர் கங்காதரனை மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அப்போது மருத்துவமனையில் இருந்து கங்காதரன் காவல் துறையினர் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளார் தற்போது தப்பி ஓடியவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் அதிமுக பிரமுகரான இவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்த நிலையில் காவலர் பிடியிலிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர் தப்பிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது