திருப்பத்தூரில்தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில்தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-18 07:24 GMT
சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்களை அராஜகமான முறையில் கைது செய்த காவல்துறையை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூய்மை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசே தற்காலிக பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், துப்புரவு பணியில் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் கடந்த 15 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், மாவட்ட தலைவர் காசி, சிபிஎம் கட்சியின் தாலுகா செயலாளர் காமராஜ், cotee மாநில செயலாளர் ஜோதி, ரவி, அருண், ஆனந்தன், சிங்காரம், கோவிந்தராஜ் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News