போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவில்;

Update: 2025-08-18 07:32 GMT
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்கு வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி,மருத்துவ காப்பீடு,ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு,குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,வாரிசு வேலை வழங்கிட வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வூதியர் இல்லம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு)சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் கலந்து கொண்டார்.

Similar News