சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல் திமுகவின் கௌசல்யா வெற்றி

நகராட்சி தேர்தல் திமுகவின் கௌசல்யா வெற்றி;

Update: 2025-08-18 09:17 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30-வார்டு பகுதிகளை கொண்டதாகும். இந்த நிலையில் இதற்கு முன்பாக இருந்த திமுக நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது கடந்த ஜூலை 17ம் தேதி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார். இந்த நிலையில் புதிய நகர்மன்ற தலைவருக்கான தேர்தல் இன்று 11 மணிக்கு மேல் நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக தரப்பிலிருந்து 6-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா வெங்கடேஷ் என்பவர் போட்டியிட்ட நிலையில் என்றும் அதிமுக தரப்பில் இருந்து 26-வது வார்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் என்ற கவுன்சிலர் போட்டியிட்ட நிலையில் 28 கவுன்சிலர்கள் வருகை தந்து வருகை பதிப்பு பதிவேட்டில் கையெழுத்திட்டு வாக்களித்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கௌசல்யா 22 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.. இதனை அடுத்து வெளியே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார் மேலும் திமுக நகர மன்ற தலைவர் மீது அனைத்து கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் திமுக நகரம் என்ற தலைப்பில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது...

Similar News