ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பதை குறித்தும் மற்றும் சிலை ஊர்வலம் சிலை கரைப்பது குறித்தும் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலைகள் வைப்பது மற்றும் கரைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சியாமளா தேவி., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.