தற்காலிகமாக விளம்பர பதாகை வைக்க அனுமதி வேண்டி மனு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக விளம்பர பதாகை வைக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் நல சங்கம் மற்றும் அமைப்பாளர் நலச் சங்கங்கள்;
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 200 பிளக்ஸ் பிரிண்டிங் சார்ந்த டிசைனர்கள், மிஷின் ஆபரேட்டர்கள், ஹெல்ப்பர்கள் என சுமார் 1500 நபர்களும், பிளக்ஸ் மற்றும் அமைப்பாளர்கள் சுமார் 2000 நபர்கள் இந்த தொழிலை நம்பி இருந்து வருகின்றனர். ஆனால் கடந்த 2 மாத காலமாக இந்த 3700 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக காவல்துறை தரப்பிலும் திண்டுக்கல் மாநகராட்சி தரப்பிலும் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி தருவது கிடையாது. இதனால், எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இதுவரை திண்டுக்கல்லில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால் எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டதில்லை. வரும் காலங்களிலும் யாருக்கும் இடையூறு இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம். குறிப்பாக காவல்துறையினர் மாநகராட்சி ஆகியோர் விதிமுறைகளை கடைப்பிடித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்க தயாராக உள்ளோம். மேலும் பிளக்ஸ் போர்டு வைப்பதால் ஏற்படும் இன்னல்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம். இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிகமாக விளம்பர பதாகை வைக்க அனுமதி அளிக்க கோரி மனு அளித்துள்ளோம்" என தெரிவித்தனர்.