மாதர் சங்க பிரதேச குழு மாநாடு ஏளூரில் நடைபெற்றது..
மாதர் சங்க பிரதேச குழு மாநாடு ஏளூரில் நடைபெற்றது..;
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஏலூரில் சமுதாய கூடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ராசிபுரம் புதுச்சேத்திரப் பிரதேச குழு மூணாவது மாநாடு திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பெண்கள் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தமிழக அரசு பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் சம்பவத்துக்கு காரணமானவர்களை கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது புகார் அளிக்க வரும் பெண்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டு நிலமற்ற ஏழை மக்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும். புதன் சந்தை அண்ணாநகர் பகுதியில் வேலை இன்றி தவிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு தாளம்பாடி ஊராட்சியில் உள்ள பாறையில் கல் உடைக்க அனுமதி வழங்க வேண்டும். மாநாட்டு நிகழ்வில் மாதர் சங்க நிர்வாகி தனம் கொடியேற்றினார். தலைவர் பி. கோமதி தலைமையில் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் நதலைவர் பி.ராணி துவக்க உரை ஆற்றினார். மாநிலச் செயலாளர் ஆர் சசிகலா சிறப்புரையாற்றினார்,ஒன்றிய செயலாளர் ஆர். லட்சுமி வேலை அறிக்கையை முன்வைத்தார். புதிய நிர்வாகிகளாக தலைவர், எம் கோமதி செயலாளர், லட்சுமி பொருளாளர், தனம் துணைத் தலைவராக எஸ்.வசந்தா துணைச் செயலாளராக கே.புஷ்பலதா பிரதேச குழு எல்உறுப்பினர்களாக என்.பழனியம்மாள் ஆர்.சரோஜா எஸ். சரசு பி.ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.