திமுக இளைஞரணியின் சாதனை விளக்க பொதுகூட்டம்

அகஸ்தீஸ்வரம்;

Update: 2025-08-18 14:27 GMT
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில்  மருங்கூர் வேப்பமூடு சந்திப்பில் பொதுகூட்டம் நடந்தது.மருங்கூர்  பேரூர்  இளைஞரணி துணை அமைப்பாளர்  விக்னேஷ் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்  ரமேஷ் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன்,  அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், என் உயிரினும் மேலான இளம் பேச்சாளர் ஞ்சலின், ஒற்றையால் விளை அன்பழகன் ஆகியோர்  சிறப்புரையாற்றினார்.  மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஒன்றிய,பேருர் துணை அமைப்பாளர்கள் பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளைகழக நிர்வாகிகள், சார்புஅணிகள்நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

Similar News