குமரியில் மேற்கு கடலோரப் பகுதிகளில் சாரல் மழை, ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலோரப் பகுதிகளுக்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் 2.1 மீட்டர் முதல் 2.4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல்சார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலை இன்று 19ஆம் தேதி காணப்படும் என்பதால், குமரி மாவட்ட கடலோரப் பகுதிக்கு இன்றும் மஞ்சள் எச்சரிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலோர பகுதிகளில் வாசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.