கன்னியாகுமரி மேற்கு மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவராக ஈத்த விளையை சேர்ந்த சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை அனுமதி உடன் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் விஜய் வசந்த் எம் பி நியமித்துள்ளார். இதற்கான நியமன சான்றிதழை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து விஜய் வசந்த எம்பி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் நிர்வாகிகள் வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.