சேலம் கருப்பூர் போலீசார் அங்கு உள்ள சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் அரவிந்தன் (வயது 27) என்பது தெரிந்தது. மேலும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, காரில் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.