சேலம் சின்னத்திருப்பதியில் அரசு அனுமதியுடன் பித்தா பிரிவு கருவுற்ற சிறுமிகளுக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பமானதால் கடலூர் மாவட்டம் குழந்தைகள் நலக் குழு உத்தரவின் பேரில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுமியை காப்பக பாதுகாப்பில் தங்க வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை அந்த சிறுமி மாயமானார். சிறுமி வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அதன் காப்பக கண்காணிப்பாளர் சகிலா கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.