ஆய்வுக்கூட உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்

மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2025-08-19 08:29 GMT
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை ஆய்வுக்கூட உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க நிறுவன தலைவர் கவுஸ் மைதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராணி மார்கரெட் வரவேற்று பேசினார். மாநில தலைவர் வெங்கடாசலம் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் ஆய்வுக்கூட உதவியாளர்கள் பணி சார்ந்த விதிகள் அமைக்க வேண்டும், ஆய்வுக்கூட உதவியாளர்களுக்கு தமிழக அரசு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் தாமோதரன், அப்துல் ரகுமான், நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News