கோவை ரயிலில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் - லாவகமாக எடுத்து உயிரை மீட்ட காவலர்கள் !

சிறுவனை காப்பாற்றிய ரயில்வே காவலர்கள் – பயணிகள் பாராட்டு;

Update: 2025-08-19 09:18 GMT
கோவை, மெட்டுப்பாளையம் – போத்தனூர் இடையேயான மெமு ரயிலில் இயங்கி வருகிறது. அதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெமு ரயிலில் பயணம் செய்த 2 வயது சிறுவன் தேவ் ஆதிரனின் தொண்டையில் மிட்டாய் சிக்கி மூச்சுத் திணறி மயக்கம் அடையும் சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த கோவை ரயில்வே பாதுகாப்பு படை (RPF) பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு மிட்டாயை அகற்றி சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். பின்னர் கோவை வந்தடைந்த போது, குழந்தையின் உடல் நலம் சோதனை செய்யும் பொருட்டு தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு இரண்டு வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

Similar News