கோவையில் வைகோ பேட்டி : பாலஸ்தீனுக்கு ஆதரவு – சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து !

தமிழக வாழ்வாதார போராட்டங்களுக்கு தயார் : கோவையில் வைகோ பேட்டி.;

Update: 2025-08-19 09:20 GMT
சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழர் என்ற முறையில் வாழ்த்துவதாக தெரிவித்தார். அவர் ராஜ்யசபை அவைத்தலைவராக சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்து வைகோ, பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடைபெற்று வருகிறது. அதை கண்டித்து இந்திய அரசு வலுவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். ஐநா சபையில் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் வாழ்வாதார பாதிப்புகள் ஏற்பட்டால் மறுமலர்ச்சி தி.மு.க போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் வைகோ கூறினார். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக, “தந்தை செய்த வேலையை பிள்ளை செய்ய வேண்டும் என்பது சமூக நீதிக்கு விரோதம் என வைகோ வலியுறுத்தினார். அதேபோல், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்த கேள்விக்கு, ஒரு சமூகம் மட்டுமே தேர்தலை நிர்ணயிக்கும் காலம் கடந்துவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

Similar News