சூலூரில் உழவர் எழுச்சி நாள் நிகழ்வு !

முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ். பழனிசாமியின் 83வது பிறந்தநாள் உழவர் எழுச்சி நாள் நிகழ்வு சூலூர் சாமலாபுரத்தில் நடைபெற்றது.;

Update: 2025-08-19 09:24 GMT
சூலூர் சட்டமன்றத் தொகுதி சாமலாபுரம் பேரூராட்சியில், கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, நொய்யல் ஆறு நன்னீர் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ். பழனிசாமி அவர்களின் 83வது பிறந்தநாள் உழவர் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. கந்தசாமி பா. (BA) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், ஜி.கே. நாகராஜ், ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News