வேம்படி தாளத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

செயற்பொறியாளர் தகவல்;

Update: 2025-08-19 09:47 GMT
வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.இந்த தகவலை தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News