காசவளநாடு கோவிலூரில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பரிசளிப்பு;

Update: 2025-08-19 13:08 GMT
தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் அரசு பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு காசவளநாடு கல்வி மேலாண்மைக்குழு சார்பில் மூன்றாமாண்டு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை முன்னாள் ராணுவ வீரர் த.செந்தில்குமார் வரவேற்றார். கல்வி மேலாண்மைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரா.அப்பர் தலைமை வகித்தார். காசவளநாடு பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  கேடயம், விருது, ரொக்கப்பரிசு ஆகியவற்றை தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.அமுதவடிவு, பெங்களூரைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி சி.ஜெயக்குமார் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். விழாவில் முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தி.அறிவுடைநம்பி, குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் ச.ரேவதி, ராசுதமிழடியான், முன்னாள் பள்ளி தலைமயாசிரியர்கள் ந.தாமோதரன், மு.நாகராஜன், குழுவின் பொருளாளர் வே.கேதீஸ்வரன், குழுவின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் க.குமார், க.பாஸ்கரன்,ரெ.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News