தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி சலுகை 

வட்டி தள்ளுபடி சலுகை;

Update: 2025-08-19 13:28 GMT
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடுகள், மனைகள், குடியிருப்புகள் ஆகிய அலகுகளில் 31.03.2015 க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களுக்கு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும்             ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதத் தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான கணக்கிடப்படும் வட்டி முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்பட்ட இச்சலுகை வருகின்ற 31.03.2026 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதன்பின் காலநீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. மேலும் நிலுவைத் தொகையினை   ஒதுக்கீடுதாரர்கள் முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.  எனவே தகுதியான ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தஞ்சாவூர் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது ஒதுக்கீட்டுக்கான நிலுவை தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News