பட்டணம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..

பட்டணம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..;

Update: 2025-08-19 14:45 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம் பேரூராட்சியில் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆனது நடைபெற்றது. இந்த முகாமில் பட்டா பெயர் மாற்றம், மின்சார சேவை, இ சேவை,மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்து பயனடைந்தனர். 350 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக பதிவு செய்தனர். இதில் உடனடியாக தீர்க்கப்படக்கூடிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் உடனடியாக அவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன். பேரூராட்சி தலைவர் போதம்மாள், துணைத்தலைவர் பொன். நல்லதம்பி மற்றும் வருவாய்த் துறையினர், மின்சார வாரியத் தறையினர், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News