குமரி :தோவாளை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மாற்றுதிறனாளிகள் சங்கம்;
மாற்றுத்திறனாளி குடும்பங்களை வறுமைக்கோட்டிற்க்கு கீழ் உள்ளதாக வரையறை செய்து அன்ன யோஜனா எ எ ஒய் ரேசன் கார்டு வழங்கி மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் எனவும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்யும் மாற்றுதிறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை முழு ஊதியம் வழங்க கேட்டும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்று த்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தோவாளை ஒன்றியம் சார்பில் பூதப்பாண்டியிலுள்ள தோவாளை தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததது. ஆர்ப்பாட்டத்திர்க்கு தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் லிட்டில் பிளவர், மாவட்ட செயலாளர் வில்சன், துணை செயலாளர் முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் ஞான செல்வம், துணை செயலாளர் அருள் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாற்றுதிறனாளியினர் கலந்துக்கொண்டனர்.