குழந்தையிடம் செயின் திருட்டு - போலீஸ் வழக்கு பதிவு

குளச்சல்;

Update: 2025-08-20 03:30 GMT
குமரி மாவட்டம் குளச்சல், மரமடி தெருவை சேர்ந்தவர் பிரவீன் ஆனந்த்வினா மனைவி நிஷா பெனி (33. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மேட்ரிமோனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று இவரது 4 வயது குழந்தையை சகோதரி மகளுடன் அங்குள்ள குருசடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் திரும்பி வந்தபோது குழந்தையின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை காணவில்லை. பல இடங்களில் தேடியும் நகை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நிஷா பெனி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News