பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தூனிற்கு பாஜகவினர் வீரவணக்கம்
ஒண்டிவீரன் நினைவு தூனிற்கு பாஜகவினர் வீரவணக்கம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 254-வது நினைவு நாளினை இன்று முன்னிட்டு அன்னாரது நினைவு தூணிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் ஆனந்த் அய்யாசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜன் வாசுதேவநல்லூர் முன்னாள் ஒன்றிய தலைவர் ராம்குமார் உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.