கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் அருள்ரீகன்(43). இவர் துபாய் நாட்டில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ரஷ்ய நாட்டு நபர் ஒருவர் துபாய் துறைமுகத்தில் நின்ற படகை கடத்திச் சென்றுள்ளார். இதற்கு அருள்ரீகன் உடந்தையாக செயல்பட்டதாக பொய்யாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். சிறையில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். மத்திய, மாநில அரசுகள் தவறு செய்யாத தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அருள்ரீகன் மனைவி கோரிக்கை விடுத்தார்.