விழுப்புரம் புறவழிச்சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை;
விழுப்புரம் நகரம், சென்னை நெடுஞ்சாலையில், முத்தாம்பாளையம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதிக்கு அருகே சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலர் தினசரி குப்பைகளை கொட்டி வருகின்றனர்.அங்கு இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், பேப்பர்கள், ஓட்டல் இலைகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், மழை நீர் தேங்கி கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால், அதனை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.