திண்டிவனம் நகராட்சியில் பூங்காவை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி, வார்டு எண் 6, அண்ணா தெருவில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட "விளையாட்டு பூங்கா"வை குழந்தைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னாள் அமைச்சர் விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.