திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். நான்கு பேர் படுகாயம்.

திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். நான்கு பேர் படுகாயம்.;

Update: 2025-08-21 05:45 GMT
திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். நான்கு பேர் படுகாயம். கரூர் ஆண்டாங் கோவில் அருகே கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன் வயது 19. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 19. ராதா வயது 20.விஸ்வஜித் வயது 26. இவர்கள் நான்கு பேரும் இரண்டு டூவீலர்களில் சென்றனர். இதில் ஒரு டூவீலரை ஆதித்யனும் மற்றொரு டூவீலரை விஸ்வஜித்தும் ஓட்டி சென்றனர். திருமாநிலையூர் அருகே உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இவர்கள் சென்றபோது ஆதித்யன் டூவீலர் மீது விஸ்வஜித் ஓட்டிச் சென்ற டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது . நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News