குமரியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டதி ஸ்கூல் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் அனுஷா பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.