கோவை: துணை ஜனாதிபதி பொறுப்பு அனைவரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பு – நம்மூராருடன் போட்டி தேவையில்லை !

பொறியியல் துறையில் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் – துணை ஜனாதிபதி விவகாரத்தில் மயில்சாமி அண்ணாதுரை பதில்.;

Update: 2025-08-21 07:57 GMT
கோவை – சூலூர் கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாணவர் வரவேற்பு விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு உரையாற்றினார். பொறியியல் துறையில் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக AI, மெக்கானிக்கல், மாற்று எரிசக்தி, பாதுகாப்பு, ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என அவர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அமெரிக்கா அளவிற்கு பொறியியலாளர்களை உருவாக்கும் நிலையில் உள்ளதாகவும், ஆனால் அந்த தரத்தை மாணவர்கள் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். N1 Super Heavy Rocket இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்குத் தேவையானது என்றும், நீரில் இருந்து ஹைட்ரஜன் பிரித்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் சிறப்பாக அமையும் என்றும், நிசார் செயற்கைக்கோள் நிலநடுக்கம் உள்ளிட்ட விஷயங்களை முன்கூட்டியே கணிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டதற்கான கேள்விக்கு, “பொறுப்பு கொடுக்கப்பட்டால் தவிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் நம் ஊரிலேயே ஒருவர் இருக்கும்போது போட்டி தேவையில்லை. எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அனைத்தும் நல்லதற்கே நடந்தது” என அவர் கூறினார்.

Similar News