கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு

இரணியல்;

Update: 2025-08-21 11:22 GMT
குமரி மாவட்டம் குசவன்குழி என்ற இடத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி பஞ்சவர்ணம் (80). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று கடைக்கு சாமான் வாங்க திங்கள்நகர் - பரசேரி சாலையில் ஓரமாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று தீடீரென பஞ்சவர்ணம் மீது மோதியது. இதில் அவரது தலை, கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு குமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று இரவு பஞ்சவர்ணம் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் கோவிந்தராஜன் அளித்த புகாரில் பேரில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News