பேரூராட்சி இளநிலை பொறியாளர் மீது கார் மோதல்

மார்த்தாண்டம்;

Update: 2025-08-21 11:29 GMT
குமரி மாவட்டம் நெய்யூர் மேலமாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(39). கோதநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் , இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினம் இவர் பைக்கில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத சொகுசு கார் மோதியது. விவேக் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் .அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News