குமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் மோகன் மகன் சிவகுமார் (35). பொன்மனை பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகியாக இருந்தார். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமான சில நாட்களில் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிவகுமார் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தகப்பனார் மோகன் வேலைக்கு சென்று விட்டு வழக்கம் போல் நேற்று வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள விட்டதில் சிவகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு குமரி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோத டாக்டர்கள் சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். குலசேகரம் போலீசார் சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்தனர். சிவகுமார் ஏன்? எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.