கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் முகாம் இன்று 21-ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாய பெருமக்கள் வருகை தந்திருந்தனர், இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூட்டத்திற்கு வாராததை தொடர்ந்து வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் பகல் 12 மணியளவில் அதிகாரியிடம் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை வழங்கி,கூட்டத்தை புறக்கணித்து வெளியே நடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் விவசாய சங்கத்தினர் கூறுகையில்" மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விவசாயிகளை மதிப்பதில்லை, விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பது,விவசாயிகளை பழி வாங்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் விவசாயிகளை அழைத்து கௌரவிக்கவில்லை. அழைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். என பாசன சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.