நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை ஆய்வு!
"நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் நடைபெறவுள்ள "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (21.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா கமல்பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் உட்பட பலர் உடனிருந்தனர்.