கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் அலுவலகத்தை திறப்பு.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் அலுவலகத்தை திறப்பு.;
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகத்தினை முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சங்கத்தின் கொடி ஏற்று விழா நடைபெற்றது, சங்கத்தின் மாவட்ட தலைவர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தினை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.