வால்பாறையில் தும்பிக்கை இல்லா குட்டி யானையை அழைத்துச் சென்ற யானைக் கூட்டம் – வைரல் வீடியோ !

வால்பாறையில் அபூர்வ காட்சி: தும்பிக்கை இல்லா குட்டி யானையை பாதுகாத்த யானைக் கூட்டம்.;

Update: 2025-08-22 05:39 GMT
கோவை, வால்பாறை அருகே சாலக்குடி சாலையில் காட்டு யானைக் கூட்டம் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மூங்கில்கள் அதிகம் காணப்படும் இந்த சாலை, பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டிய பகுதியாக இருப்பதால், காட்டு யானைகள் அடிக்கடி சாலையோரம் தென்படுகின்றன. சுற்றுலா பயணிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த பாதையில் அனுமதி வழங்கப்படுகிறது. சுமார் மூன்று வயதான இந்த குட்டியானை, பிறந்தது முதலே தும்பிக்கை இல்லாமல் உள்ளது. சமீபத்தில் பெய்து வரும் மழையால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளை கடக்கின்றன. அந்த நேரத்தில், யானைக் கூட்டம் தும்பிக்கை இல்லா குட்டியை அரவணைத்து சாலை கடந்த காட்சி, அப்பகுதி சுற்றுலா பயணிகளால் படம் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Similar News