தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப் படிப்புகள் – துணை இணையவழி விண்ணப்பம் தொடக்கம் !
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2025–2026 கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்புகளுக்கான துணை இணையவழி விண்ணப்ப முகப்பு தொடங்கப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2025–2026 கல்வியாண்டிற்கான வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான துணை இணையவழி விண்ணப்ப முகப்பு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை திறந்திருக்கும். ஏற்கனவே விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும், முதன்மை விண்ணப்பத்தை இடைநிறுத்தியோர், சமர்ப்பிக்காதோர் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கு தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தவறான தகவல் அளித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக அலுவலகங்களையும், 9488635077, 9486425076 என்ற எண்களையும் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சலையும் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.