பவித்ர மேடு- நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து தந்தை உயிரிழப்பு. தாய் மகள் படுகாயம்.

பவித்ர மேடு- நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து தந்தை உயிரிழப்பு. தாய் மகள் படுகாயம்.;

Update: 2025-08-22 06:40 GMT
பவித்ர மேடு- நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து தந்தை உயிரிழப்பு. தாய் மகள் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்கோ தூர்,கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 52. இவரது மனைவி செல்வி வயது 44. இவர்களது மகள் தனுசுயா வயது 17. இவர்கள் மூவரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கோவை - கரூர் சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை பொன்னுசாமி ஓட்டி வந்தார்.இவர்களது கார் பவித்திர மேடு தனியார் மெஸ் அருகே வந்த போது, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் சாலையோரம் தனது லாரியை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாத வகையில் நிறுத்தி இருந்ததால் , பொன்னுச்சாமி ஓட்டிச் சென்ற கார் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பொன்னுசாமி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். செல்வி,தனுசுயா இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பொன்னுச்சாமி உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக க.பரமத்தி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News