விநாயகர் சதுர்த்தி விழா- கரூர் வழியாக சிறப்பு ரயில்.ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா- கரூர் வழியாக சிறப்பு ரயில்.ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு;
விநாயகர் சதுர்த்தி விழா- கரூர் வழியாக சிறப்பு ரயில்.ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மைசூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரயில் எண்.06241 மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் 26.08.25 அன்று இரவு 20.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். ரயில் எண்.06242 திருநெல்வேலி - மைசூர் சிறப்பு ரயில் 27.08.25 அன்று பிற்பகல் 15.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக இயக்கப்படும் என சேலம் தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.