குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பஸ் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் சுவர்கள் மற்றும் பில்லர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. இதனால் சுவர்கள் சேதமடைந்து. சமீபத்தில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் ரூ 66 லட்சம் ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டது. இதை அடுத்து சுவர் மற்றும் பில்லர்களில் வண்ண படங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதற்கான பணி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி, கமிஷனர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.