திருவரம்பு: மின்வரியத்தை கண்டித்து சாலை மறியல்

கன்னியாகுமரி;

Update: 2025-08-22 12:33 GMT
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியில் இருந்து மாம்பள்ளி விளை பகுதிக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குலசேகரம் மின்வாரியம் புதிதாக மின்கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டது.  அதற்கான பணிகளை துவங்கியபோது அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நேரடியாக சென்று மனு அளித்து இந்த பகுதியில் மின்கம்பம் அமைக்காமல் மாற்றி அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர்.  ஆனால் திடீரென இன்று வெள்ளிகிழமை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்கம்பம் அமைக்கும் பணிகளை துவங்கியது.  உடனே அந்த பகுதி மக்கள் திரண்டு குலசேகரம் - அருமனை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. சம்பவம் அறிந்த திருவட்டார் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மின் கம்பத்தை மாற்றி அமைக்க முடிவு செய்ததால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் இந்த சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டது.

Similar News