முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது.;

Update: 2025-08-22 14:24 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ் பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாதம் ஆறாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News