கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு!
கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் பரதராமி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து உடனடியாகக் குடியாத்தம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் அரை மணி நேரம் போராடி அந்தப் பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.