கிருஷ்ணகிரி இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி;

Update: 2025-08-23 01:49 GMT
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள், இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயது வரை உள்ள ஆண்கள் இன்று நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து சேரலாம். மேலும் விபரங்களுக்கு, கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News