அயக்கோடு ஊராட்சியில் உயர்மட்ட பாலம் திறப்பு
காணொலியில் தமிழக முதல்வர் திறப்பு;
குமரி மாவட்டம் அயக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மலவிளை பகுதி வழியாக பரளியாற்றில் மழைக்காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.4.53 கோடியில் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கி முடிவடைந்தது. இதை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். இதனை அடுத்து பாலத்தின் பகுதியில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.