திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையருக்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரை பாராட்டிய நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுகசாமி.;

Update: 2025-08-23 07:43 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுகசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய அட்டை வழங்கப்பட்டது குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் துர்காவிடம் கேட்டறிந்தார் அதில் திருத்துறைப்பூண்டி நகராட்சிகள் பணிபுரியும் 60 தூய்மை பணியாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை எடுத்து நகராட்சி ஆணையருக்கு நலவாரிய தலைவர் சார்பு அணிவித்து பாராட்டினார்.

Similar News