நாகர்கோவில் : அமித்ஷா பேசியது   அச்சத்தின் வெளிப்பாடு

செல்வபெருந்தகை பேட்டி;

Update: 2025-08-23 13:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று  ஒரு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நாகர்கோவிலில் செய்தியாளரிடம் பேசியதாவது:-  அமித்ஷா 148 கோடி மக்களின் பிரதிநிதியாக நினைத்துக்கொண்டு யார் அடுத்த பிரதமர், யார் அடுத்த முதலமைச்சர் என ஜோசியம் சொல்லிக் கொண்டு சென்றுள்ளார். ஆர் எஸ் எஸ் பிஜேபிக்கு    ஜோசியம் எடுபடலாம். மக்கள் சக்தி முன் அவையெல்லாம் எடுபடாது. மக்கள்தான் தீர்மானிப்பார்கள். யார் பிரதமர்?, யார் முதல்வர்?, என்று. அவருடைய அச்சம், பயம் அதனை வெளிப்படுத்தி உள்ளார்.        ராகுல் காந்தி பிரதமர் ஆவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.   பாஜக கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது பிரிட்டிஷ்கால சட்டத்தை விட கடுமையான சட்டம். இதை தொடர்ந்து எதிர்ப்போம்.  தமிழக வெற்றி கழக மாநாட்டில் அதிக கூட்டம் வந்ததாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, பீகாரில் ராகுல் காந்தி நடைபயணத்தில் இந்திய வரலாறு காணாத அளவில் கூட்டம் வருகிறது ,  தமிழகத்தில் தவெக மாநாட்டிற்கு கூட்டம் அதிகமாக வந்ததாக அவர்கள் கூறுவதற்கு உரிமை உண்டு. ஆனால் தமிழகம் இதைவிட அதிக கூட்டத்தை பார்த்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News