வேலூரில் காவல் துறையினருக்கு மருத்துவ முகாம்!
காவலர் மண்டபத்தில் நாராயணி மருத்துவமனை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.;
வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நாராயணி மருத்துவமனை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ் குமார் உட்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.