திருமஞ்சன அலங்காரத்தில் கோதண்டராமர்!
சீதாதேவி சமேத ஸ்ரீ கோதண்ட ராமருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;
வேலூர் மாவட்டம் வாணியர் வீதி பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் சனிக்கிழமை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 23) சீதாதேவி சமேத ஸ்ரீ கோதண்ட ராமருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமஞ்சன அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோதண்டராமரை தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.